Header Ads

144 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் மஹா புஷ்கரம் விழா

144 ஆண்டுகளுக்கு பின் நடைபெறவிருக்கும் மஹா புஷ்கரம் விழா...



குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கன்னி ராசியில் இருந்து காவிரி நதிக்குரிய துலாம் ராசிக்கு பிரவேசிக்கும் போது நடத்தப்படுவது தான் காவிரி புஷ்கரம் விழா.

இந்த ஆண்டு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்ந்துள்ளார்.துலாம் ராசிக்குரிய காவிரி நதியில் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை இந்த புஷ்கரம் விழா நடக்கிறது.

மஹா புஷ்கரம் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழாவாக கருதப்படும்.நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்ட காவிரிக்கரையில் இந்த மஹா புஷ்கர விழாவை சிறப்பாக கொண்டாடுகிறார்கள் .கங்கையில் தினமும் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ,அந்த புண்ணியம் மயிலாடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடினால் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

புஷ்கரம் விழா பற்றி :

நவகிரகங்களில் ஒருவரான குருபகவான் ஒருமுறை பிரம்மனை நோக்கி தவம் இருந்தார். குருவின் தவத்தை கண்டு மகிழ்ந்த பிரம்மன் ,குருவின் முன் தோன்றி அவரின் கோரிக்கையை கேட்டார். குரு,தங்களின் கமண்டலத்தில் உள்ள புஷ்கர தீர்த்தத்தை எனக்கு தாருங்கள் என்று கேட்டார்.பிரம்மனும் தருவதாக ஒப்புக்கொண்டார் . பிரம்மனின் கமண்டலத்தில் இருந்த புஷ்கரம் " என்னை உங்களிடமிருந்து பிரித்து விடாதீர்கள் " என , பிரம்மனிடம் வருந்தி கெஞ்சி கேட்டுக்கொண்டது. இதனால் பிரம்மன் குருவுக்கும், புஷ்கர தீர்த்ததுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கை மேற்கொண்டார்.

புஷ்கரமானது , குருபகவான் சஞ்சரிக்கும் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளிலும், அந்தந்த ராசிக்குரிய புண்ணிய நதிகளிலும் வாசம் செய்வதுடன், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.இதன் படி புஷ்கரம் விழா , ஒவ்வொரு வருடமும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடப்பது வழக்கமானது.

குருபெயர்ச்சி காலத்தில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் 12 நாட்கள் பிரவேசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன.




12 இராசிகளும் அதற்குரிய புண்ணிய நதிகளும் :

மேஷம் = கங்கை
ரிஷபம் = நர்மதை
மிதுனம் = சரஸ்வதி
கடகம் = யமுனை
சிம்மம் = கோதாவரி
கன்னி = கிருஷ்ணா
துலாம் = காவிரி
விருச்சிகம் = தாமிரபரணி
தனுசு = பிரம்மபுத்திரா
மகரம் = துங்கபுத்திரா
கும்பம் = சிந்து
மீனம் = பரணிதா

ஆகிய நதிகளில் குருபகவான் எந்தந்த ராசிகளில் இருக்கிறாரோ அந்தந்த நதிகளில் புஷ்கரம் தங்கி இருப்பதுடன் அந்த சமயத்தில் பிரம்மா, விஷ்ணு ,சிவன், இந்திரன், ஆகியோர் ஒன்றாக இருந்து மக்களுக்கு அருள்பாலிக்கின்றனர் என்பது ஐதீகம்.

சிறப்பு :

144 ஆண்டுகளுக்கு பின் வரும் மகா புஷ்கரம் விழாவை, காவிரி பாயும் எல்லா இடங்களிலும் கொண்டாடலாம்.

மேலும் கன்னி , துலாம் , விருச்சிகம் , ராசிகளை உடையோர் புனித நீராடுவதால் நல்ல பலன்களை பெறுவர்.

இந்த விழாவில் சிறப்பு ஹோமங்கள் , வேத திருமுறை பாராயணங்கள் , ஆன்மீக சொற்பொழிவுகள் , நாம சங்கிர்தனங்கள் , காவிரியில் ஆர்த்தி வழிபாடுகள் ஆகியவை நடைபெற உள்ளன.

புஷ்கர விழாவின் பயன்கள் :

இந்த நாள்களில் மக்கள் இப்புனித நதிகளில் நீராடினால் பிதுர் தோஷம் , பிரம்மஹஸ்தி தோஷம் , நதி தோஷம் , மற்றும் பலவகை தோசங்களை நிவர்த்தி செய்யும் என்பது ஐதீகம்.

மேலும் இந்த 12 நாட்களில் காவிரி துலாக்கட்டதில் புனித நீராடினால் 3.50 கோடி தீர்த்தங்களில் நீராடிய பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.


No comments

Powered by Blogger.