திருப்பட்டூர் பிரம்மாவைத் தரிசித்தால், வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்கள் அமைவது உறுதி
குருவுக்கெல்லாம் குருவெனத் திகழ்பவர் தேவ குரு. அதனால்தான் இவருக்கு, நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக, நல்ல கிரகமாக இருக்கும் வரத்தைத் தந்தருளினார் சிவபெருமான். அந்தக் குருவுக்கு குருவாக இருப்பவர் படைப்புக் கடவுளான ஸ்ரீபிரம்மா.
குருவுக்கு அதிதேவதையாக இருந்து அருள்பாலிப்பவர் ஸ்ரீபிரம்மா. அந்த பிரம்மாவின் கர்வத்தைப் போக்கி, அவர் ஏற்றிருந்த சாபத்தைப் போக்கி, இழந்த படைப்புத் தொழிலையும் தந்தருளினார் சிவபெருமான்.
(சந்தோஷங்களைத் தரும் சப்த குரு ஸ்தலம்! படிக்க இங்கே கிளிக் செய்யவும் )
மேலும் தன்னை நாடி வரும் அன்பர்களுக்கு நல்வாழ்வு தரவும் தலையெழுத்தைத் திருத்தி அருளவும் செய்யவேண்டும் என அங்கேயே இருக்கப் பணித்தார். அந்தத் திருத்தலம்.
திருப்பிடவூர், திருப்படையூர் என்றெல்லாம் அழைக்கப்படும் திருப்பட்டூர்.
திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சாலையில் 28 வது கி.மீ. தொலைவில் உள்ளது சிறுகனூர். இங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர்.
திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சாலையில் 28 வது கி.மீ. தொலைவில் உள்ளது சிறுகனூர். இங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர்.
இங்கே சுவாமியின் திருநாமம் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர். அம்பாள் & ஸ்ரீபிரம்மசம்பத் கௌரி. எந்தக் கோயிலிலும் இல்லாத அதிசயமாக, பத்ம பீடத்தில் அமர்ந்து கொண்டு, தனிச்சந்நிதியில் இருந்தபடி பக்தர்களின் தலையெழுத்தையே திருத்தி எழுதி அருள்கிறார் ஸ்ரீபிரம்மா.
குருப்பெயர்ச்சி நாளிலும் வியாழக்கிழமைகளிலும் மாதந்தோறும் வருகிற நம் நட்சத்திர நாளிலும் இங்கு வந்து பிரம்மாவுக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, மஞ்சள் நிற மலர்களோ, அரளி மாலையோ அணிவித்து வணங்கினால், குருவின் கடாக்ஷம் கிடைக்கப் பெறலாம். குருவின் பலமும் பார்வையும் கிடைத்து இறையருளும் பெற்று இனிதே வாழலாம்!
திருப்பட்டூர் பிரம்மாவைத் தரிசித்தால், வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்கள் அமைவது உறுதி!
No comments