Header Ads

சந்தோஷங்களை அள்ளித் தரும் சப்த குரு ஸ்தலம்!

சந்தோஷங்களைத் தரும் சப்த குரு ஸ்தலம்!




திருச்சி உத்தமர்கோவில், உன்னதமான திருத்தலம் என்பதை அறிவோம். இங்கே எந்தக் கோயிலிலும் காண முடியாத வகையில், சிவா, விஷ்ணு, பெருமாள் மூவரும் குடிகொண்டு அருளாற்றுகின்றனர் என்பதையும் தெரிந்து வைத்திருக்கிறோம். மூன்று தெய்வங்களும் ஒன்று சேர்ந்து அருள்பாலிக்கும் அற்புதமான திருத்தலம் என்று அனைவரும் போற்றுகின்றனர்.

திருச்சியில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் வழியில், பழைய சமயபுரம் டோல்கேட் பகுதி உள்ளது. இங்கிருந்து நொச்சியம் செல்லும் பாதையில், மேம்பாலத்துக் கீழ்ப்பகுதியில் அமைந்து உள்ளது உத்தமர்கோவில் திருத்தலம்.
இங்கே. இந்தத் தலத்தின் இன்னொரு முக்கியமானச் சிறப்பு. சப்த குரு ஸ்தலம் இது.




(குபேரனை எப்படி வழிபட்டால் செல்வம் பெருகும் ….)


அதாவது ஏழு குரு கோலோச்சும் கோயில். தேவகுரு பிரகஸ்பதி, அசுர குரு சுக்கிராச்சார்யர், ஞான குருவாக ஸ்ரீசுப்ரமணியர், படைப்புக் கடவுளான பரப்பிரம்மம் ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு குருவாக ஸ்ரீவரதராஜர், சிவ குருவாக ஸ்ரீதட்சிணாமூர்த்தி, சக்தி குருவெனக் காட்சி தரும் ஸ்ரீசௌந்தர்ய நாயகி ஆகியோர் அனைவரும் ஒரே இடத்தில், ஒரே தலத்தில், ஒரே கோயிலில் காட்சி தந்து அருள்மழை பொழிகின்றனர்.
குரு பகவானின் அதிதேவதை ஸ்ரீபிரம்மா. சப்த குருவும் கொண்டிருக்கும் கோயிலுக்கு வந்து, அவர்களைக் கண்ணாரத் தரிசித்து மனதாரப் பிரார்த்தனை செய்தால், குரு தோஷம் நீங்கும். மந்த புத்தி விலகும். காரியத் தடைகள் அகலும். நினைத்ததெல்லாம் நடந்தேறும். குரு பலத்துடன் ஆனந்த வாழ்வு மலர்வது நிச்சயம்!

No comments

Powered by Blogger.